நவக்கிரக வழிபாடு



நவகிரகங்களை வழிபடுதல் மிகத் தொன்மையான வழிபாடாக இருந்துள்ளது. வரலாற்று ஆய்வின்படி புத்தர் காலத்திலும் இந்த வழிபாடு இருந்துள்ளது. இருப்பினும் நவக்கிரகங்களை தனித்தே அக்காலத்தில் வழிபட்டு வந்திருக்கிறார்கள். அனைத்தையும் ஒரு சேர வழிபடும் வழமை கிபி11ம் நூற்றாண்டில் தோன்றியது. அப்போது முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சிகாலமாகும். தஞ்சை மாவட்டத்தில் குலோத்துங்க சோழ மார்த்தாண்ட ஆலயம் என்ற கோயில் அமைக்கப்பட்டது. தற்போது அதனை சூரியனார் கோயில் என அழைக்கிறோம். இந்தக் காலத்தின் தொடர்ச்சியாக சண்டேள ஆட்சியாளர்கள் ஒடிசா மாநிலத்தில் கோனார்க் எனுமிடத்தில் சூரியனுக்கு தனிக் கோயில் அமைத்தனர்.

பல்லவர்கள் மற்றும் சோழர்களின் காலத்தில் கற்றளிகளாக உயரமமான மேடையின் மீது நவக்கிரகங்கள் பிரதிஸ்ட்டை செய்யப்பட்டன. தற்போது இந்த வழமையே பெரும்பாலான சிவாலயங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
சமண சமயத்திலும் நவக்கிரக வழிபாடு காணப்படுகிறது. சமணர்கள் தங்களுடைய தீர்த்தங்கரர்களின் தன்மைகளோடு நவக்கிரகங்களை ஒப்பிட்டு வகைப்படுத்துகின்றனர்.

கிரகங்கள் - தீர்த்தங்கரர்கள்

புதன் - மல்லிநாதர்
சுக்ரன் - புஷ்பதந்தர்
சனி - மூனிசுவிரதர்
குரு - வர்த்தமானர்
சூரியன் - பத்மபிரபர்
சந்திரன் = சந்திரபிரபர்
செவ்வாய் - வாசுபூஜ்யர்
கேது - பார்சுவநாதர்

ராகு – நேமி

Comments