ஆனி அடி கோலாதே... கூனி குடி போகாதே


ஆனி அடி கோலாதே

கூனி குடி போகாதே
-பழமொழியின்  ஜோதிட சூட்சமம்
***********************



ஆக்கல்
=========
மேஷம்,கடகம் ,துலாம், மகரம்

காத்தல்
========
ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம்,
கும்பம்.

அழித்தல்
=========
மிதுனம்,கன்னிதனுசு ,மீனம்


அழித்தல் மாதமான

மிதுன மாதம் =ஆனி
கன்னி மாதம் =புரட்டாசி
தனுசு மாதம் =மார்கழி
மீன மாதம் =பங்குனி

மேற்கண்ட நான்கு மாதத்தில்
சுபகாரியங்கள் நம் முன்னோர்கள் செய்ய கூடாது என்று கூறியதன் சூட்சமம் இது தான்.

மேற்கண்ட அழித்தல் மாதத்தில் செய்யும் சுபங்கள் விருத்தி அடையாது மாறாக அழிவை
நோக்கி செல்லும் என்பதால்
தான் மேற்கண்ட மாதத்தில்
சுபம் செய்ய கூடாது என்பதை
நம் முன்னோர்கள் உணர்த்தி
சென்றுள்ளனர்.

ஆனால் இன்று புரட்டாசி,
மார்கழி தவிர மீதி இரண்டு
மாதமான ஆனி,பங்குனியில்
சுபம் காரியங்கள் இன்று
நடைபெறுகின்றன.

ஆக அழித்தலை குறிக்கும்
ராசி மாதத்தில் சுபகாரியம்
செய்வதைநிச்சயம் தவிர்க்க வேண்டும்.

ஆக்கலை குறிக்கும் ராசி
மாதமான சித்திரை,ஆடி,
ஐப்பசி,தை மாதத்தில்
உத்யோக முயற்சி,புதிய
தொழில் தொடங்குதல்,
புதியதாக உற்பத்தி செய்யும்
அனைத்து காரியங்களும்
செய்யுங்கள்.அந்த காரியம்
மிக வேகமான வளர்ச்சி
நிலையை நிச்சயம் அடையும்

காத்தல் ராசி மாதமான
வைகாசி,ஆவணி,
கார்த்திகை மாசி போன்ற மாதங்களில் இல்வாழ்க்கை சிறப்பு அடைய செய்யும்
சுபா சுபங்கள் ஆன திருமணம்,போன்ற
மானுட வாழ்க்கைக்கு தேவையான அனைத்து சுபமும் செய்ய அந்த
காரியம் நிலையான
வளர்ச்சியை அடையும்.

அழித்தல் மாதத்தில் செய்யும்
காரியங்கள் அனைத்தும்
நிலையாக இருப்பது போல் சென்று,பின் அதிவேகமாக
இயங்கி ப்ரேக் பிடிக்காத
வாகனம் போல் முட்டி மோதி
அழிந்து விடும்.

மேற்கூறிய மாதங்களில்
விதி விலக்கு உண்டு.
அதாவது பங்குனியில்
சுபம் செய்யலாம் என்றும்
ஆடி மாதத்தில் சுபகாரியம்
செய்ய கூடாது என மூல
நூல் கூறுகிறது.இதில்
பங்குனியில் கிரகபிரவேசம்
மட்டும் செய்ய கூடாது.

சுந்தரானந்தர் ஜோதிட
காவியம் என்னும் நூல்
பின்வரும் பாடல் வழியில்
சுபகாரியம் செய்ய உகந்த சிறப்பான மாதங்களை
கூறுகின்றது

''தபமெனும் மாசி திங்கள்
தையும் வைகாசி மாதம்
நபமெனும் சிங்க மாதம்
நல்ல கார்த்திகையின் மாதம்
நிபமெனும் மீன மாதம்
நிகத் துலாம் மாதமெழும்
சுபமெனும் மாத மென்றே
சொல்லலாம் இதனை தானே ''

இப் பாடலின் படி மாசி.தை,
வைகாசி,ஆவணி,கார்த்திகை
பங்குனி,ஐப்பசி இந்த ஏழு மாதங்கள் சுபகாரியம் செய்ய
உகந்த மாதங்கள் என கூறுகிறது.ஆடி மாதம் மட்டும்
இந் நூல் சுபம் செய்ய கூடாது
என கூறுகிறது.

அதே போல் வீடு குடி புக
ஆகாத மாதத்தையும் இந்
நூல் கூறுகிறது.

''கூனி ஆனி கொடு
புரட்டாசியும் ஊன
மார்கழி யோர்க்கு
நான்கு மாதமும்
மாநிலத்தோர் மனைகுடி
தான் புகில்
ஈனமாகி இடர் செயும்
நோய்களே ''

மேற்கண்ட பாடல் அழித்தல்
மாத ராசிகள் ஆன ஆனி
புரட்டாசி,மார்கழி,
பங்குனியில் நிச்சயம் வீடு
குடி போக கூடாது என
கூறுகிறது.

சரிங்க இனி விஷயத்துக்கு
வருவோம்.

ஆனி அடி கோலாதே
கூனி குடி போகாதே
என்ற பழமொழியின் உண்மை தத்துவம் என்ன ?

காலப்புருஷ ராசியின்
நான்காம் பாவம் கடகம்.
இது வீடு,நிலம்,போன்ற
காரகங்களை குறிக்கும்.
இந்த கடகத்திற்கு 12ம் வீடு மிதுனம்.இதில் கடகம் ஆக்கல் ராசி.மிதுனம் அழித்தல்
ராசி.

ஆக்கல் ராசியான கடகத்திற்கு விரைய பாவம் மிதுனம்.
இது அழித்தல் ராசி
ஆகவும் வருவதால்.சூரியன்
இந்த மிதுன ராசிக்கு வரும்
ஆனி மாதத்தில் வீடு
கட்ட மனையடி சாஸ்திரம் பார்த்துமனைகோலக் கூடாது .அதாவது வாஸ்து ஆரம்ப பூஜை
செய்ய கூடாது.என்பதை விளக்கவே
ஆனி அடி கோலாதே
என்ற பழமொழியை நம்
முன்னோர்கள் ஏற்படுத்தி
உள்ளார்கள்.அப்படி மீறி
செய்தால் அந்த வீட்டிற்கே
அழிவு ஏற்படும்.

கலப்புருஷ ராசி கடகத்திற்கு
ஒன்பதாம் பாவம் சகல பாக்கியங்களை தரும் பாவம்.
காலப்புருஷ ராசியின் 4ம் வீட்டிற்கு 9ம் பாவம் மீனம்.
மீன மாதத்தை பங்குனி
மாதம் என்கிறோம்.அது காலப்புருஷ ராசியின்
முதல் ராசி மேஷத்திற்கு
விரைய பாவமாகவும்,
அழித்தல் ராசி ஆகவும்
வருவதால் பங்குனி
மாதத்தில் வீட்டிற்கு குடிபோக கூடாது.அதாவது
கிரகபிரவேசம் செய்யக் கூடாது என்பதை நம்
முன்னோர்கள் தெளிவாக
அறிந்துள்ளனர்.
அப்படி மீறி கிரகப்பிரவேசம்
செய்தால் அந்த வீட்டு
தலைவரின் உயிருக்கே
விரையம் ஏற்படும்.

ஆனி அடி கோலாதே
கூனி குடி போகாதே
என்ற கூற்றின்படி அதன்
உண்மை தத்வார்த்தம்

ஆனி மாதம் கிரக ஆரம்பம்
செய்ய கூடாது.

பங்குனி மாதம் கிரகபிரவேசம் செய்யக் கூடாது.

என்று தெளிவாக அறியலாம்.

மேலும் சுந்தரானந்தர் ஜோதிட காவியம் கூற்றின்படி
புரட்டாசி,மார்கழி மாதம்
வீடு குடிபோனால்,
அவர்களைநோய் உபாதைக்கு உட்படுத்தி ஈனம்
ஆக்கிவிடும்.இதற்கு என்ன
காரணம் என்றால்,
மேஷத்திற்கு 6ம் ராசி மாதம்
புரட்டாசி மாதம்
கடகத்திற்கு 6ம் ராசி மாதம்
மார்கழி மாதம்.

ஆனி மாதம் கிரக ஆரம்பம்
செய்தால் வீடு கைவிட்டு
போகும்.

புரட்டாசி கிரகபிரவேசம்
செய்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு நோய் ஏற்படும்.

மார்கழியில் கிரகபிரவேசம்
செய்தால் வீடு இடிந்து
விழும்,அல்லதுஇடிக்கப்படும்
வீட்டிற்கு ஈனம் அல்லது
வீட்டு தலைவருக்கு ஈனம்
உண்டாகும்(.அங்க பழுது )

பங்குனியில் கிரக பிரவேசம்
செய்தால் வீட்டில் உள்ளவர்களின் உயிருக்கு
ஊறு விளைவிக்கச் செய்யும்

சாஸ்திரம் பார்த்து
கோத்திரம் போற்று....

நல்ல நாளில் சுபகாரியங்கள்
செய்து வளமும் நலமும்
பெறுங்கள்

ஒரு நல்ல நாள் செய்வதை
நல்லோராலும் செய்ய
முடியாது.




Courtesy: அஸ்ட்ரோ சக்திகுரு

Comments

Popular Posts